“இந்தாண்டில் மட்டும் 95 புலிகள் உயி‌ரிழப்பு” - சர்வே முடிவு

“இந்தாண்டில் மட்டும் 95 புலிகள் உயி‌ரிழப்பு” - சர்வே முடிவு
“இந்தாண்டில் மட்டும் 95 புலிகள் உயி‌ரிழப்பு” - சர்வே முடிவு
Published on

நாட்டில் இந்தாண்டு மட்டும் 95 புலிகள் உயி‌ரிழந்து இருப்பதாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையமான என்.டி.சி.ஏ. தெரிவித்துள்ளது.

புலிகளின் இருப்பிடமான காடுகளை அழித்தல், புலிகளின் வழித்தடங்கள் அழிக்கப்பட்டு சாலைகள் அமைத்தல், மனிதர்களின் தலையீடு உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவில் புலிகள் அதிக அளவில் காட்டை விட்டு வெளியேறுகின்றன. தன் இருப்பிடத்தை விட்டு வெளியேறும் புலிகள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை இல்லாமல் உயிரிழக்கின்றன. மேலும் மனிதர்களின் வேட்டைக்கும் இது எளிதில் வாய்ப்பு அளிப்பதால் பல புலிகள் வேட்டைக்காகவும் கொல்லப்படுகின்றன. பொதுவாக புலிகள் தோல், நகம் என உடல் உறுப்புகளுக்காகவே அதிக அளவில் வேட்டையாடப்படுகின்றன.

இந்நிலையில் புலிகளின் உயிரிழப்பு தொடர்பான புள்ளிவிவரங்களை தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையமான என்.டி.சி.ஏ. தெரிவித்துள்ளது. அதன்படி,

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 14 புலிகளும், குறைந்தபட்சமாக உத்தரகண்டில் 4 புலிகளும் இறந்துள்ளன. மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக ‌மத்தியப்‌பிரதேசத்‌தில் 11 புலிகளும், கர்நாடகாவில் 6 புலி‌களும் ‌இந்தாண்டு மட்டும் உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

2014ம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளிவிவரத்தின் படி மகாராஷ்டிராவில் 190 புலிகள் இருந்ததாகவும், அதில் 74 புலிகள் காட்டுக்கும் வெளியே வாழ்ந்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 14 புலிகள் மட்டுமே இயற்கையாக உயிரிழந்து இருப்பதாகவும், மற்றவை மனிதர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளாலேயே இறந்துள்ளதாகவும் கூறப்‌பட்டு உ‌ள்ளது.

புலிகள் உயிரிழப்புகளை தடுக்க கடும் ந‌டவடிக்கைகள் அவசியம் என்றும் என்.டி.சி.‌ஏ. தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com