ராணுவத்துக்கு அதிகம் செலவிடும் நாடுகளில் இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?

ராணுவத்துக்கு அதிகம் செலவிடும் நாடுகளில் இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?
ராணுவத்துக்கு அதிகம் செலவிடும் நாடுகளில் இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?
Published on

உலகிலேயே ராணுவத்துக்காக அதிகம் செலவிடும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 5-வது இடத்தைப் பிடித்துள்ளது.

ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு இன்ஸ்டிடியூட் (சிப்ரி) வெளியிட்டுள்ள தகவலின்படி: 2016-ல் இந்தியாவின் ராணுவ செலவு 8.5 சதவீதமாக அதிகரித்தது.

ராணுவத்தை மேம்படுத்த 55.9 பில்லியன் அமெரிக்க டாலரை செலவிட்டுள்ளது. இதன்மூலம் ராணுவத்துக்காக அதிகம் செலவிடும் நாடுகளின் பட்டியலில்

இந்தியா 5-வது இடத்தைப் பிடித்துள்ளது. முதல் இடத்தில் உள்ள அமெரிக்கா 2015 மற்றும் 2016-ம் காலகட்டத்தில் 1.7 சதவீதம் வரை அதிகரித்து 611 பில்லியன்

டாலரை ராணுவத்துக்கு செலவிட்டுள்ளது.

சீனா, ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும் முதல் 15 இடங்களில் இடம்பிடித்துள்ளன. இதில், 2-வது இடத்தில் உள்ள சீனாவின் ராணுவ

செலவினம் 215 பில்லியன் டாலர். இது கடந்த காலங்களை விட 5.4 சதவீதம் அதிகம். ரஷ்யா, மொத்தமாக 69.2 பில்லியன் டாலரை செலவிட்டு 3-வது இடத்தைப்

பிடித்துள்ளது. சவுதி அரேபியா தனது ராணுவ செலவினத்தை, கடந்த ஆண்டுகளை விட 30 சதவீதம் வரை குறைத்துக் கொண்டதால் 4-வது இடத்துக்கு

தள்ளப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் 9.93 பில்லியன் டாலர் வரை ராணுவத்துக்காக செலவிட்டுள்ளது. எனினும் முதல் 15 இடங்களுக்குள் பாகிஸ்தான் இடம்பெறவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com