உலக பட்டினி குறையீடு பட்டியல்.. 105 ஆவது இடத்தில் இந்தியா!

உலக பட்டினிக் குறியீடு பட்டியலில் இந்தியா 105ஆவது இடத்தில் உள்ளது. இதன் மூலம் பட்டினி விவகாரத்தில் தீவிர பகுப்பாய்வுக்கு உட்படுத்தும் பிரிவில் இந்தியா இருக்கிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்pt web
Published on

127 நாடுகள் கொண்ட பட்டியலில் கடந்தாண்டு மிகவும் பின் தங்கிய 111ஆவது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 105ஆவது இடத்திற்கு சென்றுள்ளது. உலக நாடுகளில் பசியின் அளவை கண்காணிப்பதற்கான கருவியாக ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தை இறப்பு ஆகியவற்றின் அடிப்படையில் சர்வதேச பட்டினி குறியீடு கணக்கிடப்படுகிறது.

பட்டினி
பட்டினி

136 நாடுகளில் கணக்கெடுக்கப்பட்ட பட்டினிக் குறியீட்டின் அடிப்படையில் 19ஆவது பட்டியலை அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த மனிதநேய அமைப்பான கன்சர்ன் ஓல்டுவைட், ஜெர்மனியின் வெல்ட் ஹங்கர்லைப் ஆகியவை வெளியிட்டுள்ளன.

கோப்புப்படம்
முன்னாள் அமைச்சரான தேசியவாத காங். மூத்த தலைவர் பாபா சித்திக் படுகொலை - அதிர்ச்சியில் மகாராஷ்டிரா!

இதன் அடிப்படையில் நாட்டு மக்களில் 13.7 சதவிகிதம் பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 35.5 சதவிகிதம் பேர் வளர்ச்சி குன்றியவர்களாகவும், அதில் 18.7 சதவிகிதம் பேர் எடை குறைந்தவர்களாகவும் உள்ளனர். 2.9 சதவிகித குழந்தைகள் 5 வயது நிறைவடைவதற்கு முன்பே இறப்பதும் தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com