தரமான மருத்துவ சிகிச்சை கிடைக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 145வது இடம் வகிக்கிறது. லான்செட் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.
தரமான மருத்துவ சேவை வழங்கப்படும் நாடுகள் பட்டியலில் மொத்தம் 195 நாடுகள் இடம் பெற்றுள்ளன. இப்பட்டியலில் இலங்கை, வங்கதேசம், பூடான், சீனா போன்ற நாடுகள் இந்தியாவை விட சிறந்து விளங்குவதாக லான்செட் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிய வந்துள்ளது. சிறப்பான மருத்துவ சேவை கொண்ட நாடுகளில் ஐஸ்லாந்து உலகளவில் முதலிடத்தில் உள்ளது. நார்வே, நெதர்லாந்து ஆகிய நாடுகள் அடுத்த 2 இடங்களில் உள்ளன. இந்தியாவில் சிறந்த மருத்துவ சேவையில் கேரளா, கோவா மாநிலங்கள் முதல் 2 இடங்களில் உள்ளதாகவும் அசாம், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் கடைசி இடங்களில் இருப்பதாகவும் லான்செட் தெரிவித்துள்ளது