பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள குருதுவாரா தர்பார் சாஹிப் தலத்திற்கு இந்திய பக்தர்கள் விசா இல்லாமல் சென்று வழிபட அனுமதிக்க இரு நாடுகளும் ஒப்புக்குக்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீக்கிய மதத்தை தோற்றவித்த குருநானக், பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூரில் 19 ஆண்டுகள் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. அவர் நினைவாக இந்திய எல்லையில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் ராவி நதிக்கரையில் கர்தார்பூரில் தர்பார் சாஹிப் என்ற பெயரில் குருத்வாரா அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சீக்கியர்கள் விசா இன்றி புனிதப் பயணம் மேற்கொள்ள இந்தியாவின் குருதாஸ்பூரையும் பாகிஸ்தானின் கர்தார்பூரையும் இணைக்க சாலை அமைக்கப்பட்டது.
கர்தார்பூர் வழித்தடத்தில் பக்தர்களை அனுபதிப்பது குறித்து மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசின் அட்டாரியில் பாகிஸ்தானை சேர்ந்த 20 அதிகாரிகளும் இந்திய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். முன்னதாக, இந்தியாவிலிருந்து கர்தார்பூர் வரும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்க பாகிஸ்தான் அதிகாரி ஒப்புதல் தெரிவித்துள்ளனர். இதற்கு சேவை கட்டணம் பெற பாகிஸ்தான் விரும்பியதாகவும் ஆனால் இந்தியா மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில், இந்திய அதிகாரிகள் குருத்வாராவில் இருக்க அனுமதிக்கமுடியாது என பாக்., தெரிவித்ததாக அதிகாரிகள் கூறினர்.
ஒவ்வொரு நாளும் 5 ஆயிரம் பக்தர்களை அனுமதிப்பது என்றும் பின்னர் இந்த எண்ணிக்கையை அதிகரிக்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டது. இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு நவம்பரில் குருநானக்கில் 550ஆவது பிறந்தநாளையொட்டி கர்தார்பூர் வழித்தடத்தை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளனர். ஆனால் இது தொடர்பான வரைவு ஒப்பந்தம் இதுவரை இறுதி செய்யவிப்படவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.