‘’இந்தியா பலவீனமான நாடல்ல; அத்துமீறினால் பதிலடி நிச்சயம்’’ - ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

‘’இந்தியா பலவீனமான நாடல்ல; அத்துமீறினால் பதிலடி நிச்சயம்’’ - ராஜ்நாத் சிங் எச்சரிக்கை
‘’இந்தியா பலவீனமான நாடல்ல; அத்துமீறினால் பதிலடி நிச்சயம்’’ - ராஜ்நாத் சிங் எச்சரிக்கை
Published on

எல்லையில் நடைபெறும் எந்த விதமான அத்துமீறல்களுக்கும் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் என்று எச்சரித்துள்ளார் ராஜ்நாத் சிங்.

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாள் பயணமாக தெலங்கானா மாநிலத்திற்கு வெள்ளிக்கிழமை சென்றார். அங்கு அவர் துண்டிகலில் உள்ள இந்திய விமானப் படை அகாடமியின் தளத்தில் நடைபெற்ற கூட்டு அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

''சீனாவின் நோக்கம் என்ன என்பது, இந்த கொரோனா பேரிடர் காலத்தில் வெளிப்பட்டது. இந்திய - சீன எல்லைப் பகுதியில் சீனப் படைகளின் அத்துமீறல்களின்போது நமது படை எப்போதும் பலம் குறைந்தது இல்லை என்பதை நிரூபித்திருகிறோம். எல்லையில் நடைபெறும் எந்த விதமான அத்துமீறல்களுக்கும் இந்த புதிய இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்.

இந்தியா - சீனா இடையேயான எல்லைப் பதற்றத்தைக் குறைக்கும் வகையில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், இந்தியா எப்போதும் அமைதியையே விரும்புகிறது. அதற்காக அச்சுறுத்தல்களை இந்தியா பொறுத்துக் கொள்ளாது’’ என்று ராஜ்நாத் சிங் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com