"இந்தியாவின் பழைய கலாசாரத்தையும், சனாதன தர்மத்தையும் மீட்டெடுக்க வேண்டியது அவசியம்" என்று கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் வலியுறுத்தியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் உள்ள கலான் நகரில் ஒரு தனியார் பள்ளியின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆரிப் முகமது கான் பேசியதாவது:
இந்தியா பழம்பெரும் கலாசாரத்தையும், பண்பாட்டையும் கொண்ட நாடு ஆகும். அதுவே நமது சிறப்பம்சமாக இருந்தது. ஆனால், இன்று அந்த பழைய கலாச்சாரங்களை நாம் மறந்து கொண்டே வருகிறோம். இது நாட்டின் எதிர்காலத்துக்கு நல்லது அல்ல. எனவே நமது பழைய கலாசாரங்களை மீட்க நாம் பாடுபட வேண்டும். கலாசாரத்துடன் சேர்ந்து நமது சனாதன தர்மத்தையும் மீட்டெடுக்க வேண்டியது அவசியம். அதற்கு கல்வியே சிறந்த கருவி. கல்வியை பரப்புவதன் மூலமே சனாதன தர்மத்தை நாம் மீட்டெடுக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.