குல்பூஷன் ஜாதவ் விவகாரத்தில் இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடியது ‘மிகப்பெரிய தவறு’ - கட்ஜூ

குல்பூஷன் ஜாதவ் விவகாரத்தில் இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடியது ‘மிகப்பெரிய தவறு’ - கட்ஜூ

குல்பூஷன் ஜாதவ் விவகாரத்தில் இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடியது ‘மிகப்பெரிய தவறு’ - கட்ஜூ
Published on

குல்பூஷண் ஜாதவ் விவகாரத்தில் இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடியது ‘மிகப்பெரிய தவறு’ என மார்க்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார்.

இந்தியக் கடற்படையில் அதிகாரியாக பணியாற்றியவர் குல்பூஷண் ஜாதவ், பாகிஸ்தானில் உளவு பார்த்தார் என அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. இவ்விவகாரத்தில் பாகிஸ்தானில் நீதி போராட்டம் என்பது சாத்தியமில்லாதது என இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடியது. இருதரப்பு வாதத்தையும் கேட்ட சர்வதேச நீதிமன்றம், குல்பூஷண் ஜாதவ்வை இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதி அளிக்க வேண்டும் எனவும் அடுத்த உத்தரவு வரும் வரையில் மரண தண்டனையை நிறைவேற்றக் கூடாது எனவும் பாகிஸ்தானுக்கு உத்தவிட்டது.

இது குறித்து கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ, குல்பூஷண் ஜாதவ் விவகாரத்தில் இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடியது ‘மிகப்பெரிய தவறு’ என கூறியுள்ளார். இது தொடர்பாக ஃபேஸ்புக்கில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், குல்பூஷண் ஜாதவ் விவகாரத்தில் சர்வதேச நீதிமன்றத்தின் முன்னதாக இந்தியா வெற்றி அடைந்துள்ளதை மக்கள் கொண்டாடி வருகிறார்கள். என்னுடைய கருத்து என்னவென்றால் இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடி மிகப்பெரிய தவறை செய்துள்ளது.

இதன்மூலம் பாகிஸ்தான் பல்வேறு பிரச்னையை சர்வதேச நீதிமன்றத்தில் எழுப்ப இந்தியா வழிவகை செய்து கொடுத்துள்ளது. இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடியதில் பாகிஸ்தான் அதிக எதிர்ப்பு தெரிவிக்காததற்கு இதுவே உண்மையான காரணம். நாம் சர்வதேச நீதிமன்றத்தை நாடியதில் பாகிஸ்தான் மகிழ்ச்சி அடையும். நாம் இப்போது வரையில் எதிர்ப்பு தெரிவிக்கும் காஷ்மீர் விவகாரம் உட்பட பிற பிரச்னைகளை பாகிஸ்தான் சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லும் என கட்ஜு கூறியுள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com