வெளிநாடுகளுக்கு புலம்பெயர்வோரில் இந்தியர்களே அதிகம்: ஐ.நா.தகவல்!

வெளிநாடுகளுக்கு புலம்பெயர்வோரில் இந்தியர்களே அதிகம்: ஐ.நா.தகவல்!
வெளிநாடுகளுக்கு புலம்பெயர்வோரில் இந்தியர்களே அதிகம்: ஐ.நா.தகவல்!
Published on

உலகிலேயே வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து வாழ்வோரில் இந்தியர்களே அதிகம் என்பது ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.

ஐநா சபையின் பொருளியல், சமூக விவகாரத்துறையின் மக்கள் தொகைப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், 2019 ஆண்டு உலக அளவில் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 27 கோடியே 2 லட்சம் பேர் தெரியவந்துள்ளது. இதில் 1 கோடியே 75 லட்சம் பேர் இந்தியர்கள் என்பது தெரியவந்துள்ளது. மெக்சிகோவிலிருந்து 1 கோடியே 18 லட்சம் மக்களும், சீனாவிலிருந்து 1 கோடியே 7 லட்சம் பேரும் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளனர். 

இதேபோன்று ரஷ்யாவிலிருந்து 1 கோடியே 5 லட்சம் பேர் பிற நாடுகளில் குடியேறியுள்ளனர். சிரியாவிலிருந்து 82 லட்சம் மக்களும், வங்காளதேசத்திலிருந்து 78 லட்சம் மக்களும், வேறு நாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளனர். மேலும் பாகிஸ்தானிலிருந்து 63 லட்சம் பேரும் உக்ரைனிலிருந்து 59 லட்சம் பேரும் அவரவர் நாட்டைவிட்டு வேறு நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். 

பிலிப்பைன்ஸிலிருந்து 54 லட்சம் பேரும், ஆப்கானிஸ்தானிலிருந்து 51 லட்சம் பேரும் வேறுநாடுகளுக்கு புலம்பெயந்துள்ளனர். இதேபோன்று பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 51 லட்சம் பேருக்கு இந்தியா இடமளித்துள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 2019 ஆம் ஆண்டு வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 23 சதவீதம் அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com