உலகளவில் பொருளாதாரத்தில் அதிக வளர்ச்சி அடைந்து வரும் நாடு இந்தியாதான் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்தியாவில் ஜனநாயகம் வலிமையாக உள்ளதாகக் கூறினார்.
“உலக பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருப்பதாக சர்வதேச நாணய நிதியமான ஐ.எம்.எஃப். கூறுகிறது. உலகின் பல நாடுகளின் வளர்ச்சி குறைந்து வருவதாகவும் மந்தமாக இருப்பதாகவும் ஐ.எம்.எஃப் தெரிவித்துள்ளது. முன்பு 5% வளர்ச்சி என்று கூறியிருந்த பல நாடுகளின் வளர்ச்சிக் கணிப்பை 3% க்கும் கீழாக அது குறைத்துள்ளது. ஆனால் இந்தியாவின் வளர்ச்சி 8% வரை இருக்கும் என்று கணித்துள்ள ஐ.எம்.எஃப், உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதாரம் இந்தியாவுடையது தான் கூறியுள்ளது. ” என்று நிர்மலா சீதாராமன் பேசினார்.