ஊழலற்ற நாடுகளின் பட்டியல் ! இந்தியாவுக்கு எந்த இடம் ?

ஊழலற்ற நாடுகளின் பட்டியல் ! இந்தியாவுக்கு எந்த இடம் ?
ஊழலற்ற நாடுகளின் பட்டியல் ! இந்தியாவுக்கு எந்த இடம் ?
Published on

கடந்த 2018ல் ஊழலற்ற நாடுகள் பட்டியலில் இந்தியா 78ஆவது இடத்தை பிடித்துள்ளது. 

டிரான்பரன்ஸி இண்டர்நேஷனல் என்ற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகளின் ஊழல் நிலவரம் குறித்த பட்டியலை வெளியிடுகிறது.‌‌ இதில், அந்த நாடுகளின் ஊழலற்ற நிர்வாகம், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படுகின்றன. 180 நாடுகள் கொண்ட இந்த பட்டியலில் ஊழலற்ற நிர்வாகம் என்ற அடிப்படையில் இந்தியா 78ஆவது இடத்தை பிடித்துள்ளது. டென்மார்க் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன. 

அதேநேரம், சோமாலியா, சிரியா, தெற்கு சூடான் ஆகிய நாடுகள், கடைசி இடங்களில் உள்ளன. கடந்த ஆண்டைக்காட்டிலும்  3 புள்ளிகள் அதிகரித்து 78ஆம் இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது. மேலும் அண்டை நாடுகளான சீனா 87ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 117‌ஆவது இடத்திலும் உள்ளதாக டிரான்பரன்ஸி இண்டர்நேஷனல் அமைப்பு கணித்துள்ளது.

2014-ம் ஆண்டு 85-வது இடத்தில் இருந்த இந்தியா, 2015ல் 9 இடங்கள் ஏற்றம் கண்டு 76-வது இடத்தை அடைந்தது. 2017ம் ஆன் ஆண்டில் இந்தியா 81வது இடத்தை பிடித்து இருந்தது.

ஆய்வு மேற்கொள்ளப்பட்ட 180 நாடுகளில் 3-ல் 2 நாடுகள் 50 புள்ளிகளுக்கும் கீழாக பெற்றுள்ளன. சராசரியாக 43 புள்ளிகள் பெற்றுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com