பீரங்கிகளை அழிக்கும் இந்தியாவின் ஹெலினா ஏவுகணை சோதனை வெற்றி

பீரங்கிகளை அழிக்கும் இந்தியாவின் ஹெலினா ஏவுகணை சோதனை வெற்றி
பீரங்கிகளை அழிக்கும் இந்தியாவின் ஹெலினா ஏவுகணை சோதனை வெற்றி
Published on

பீரங்கிகளை அழிக்கும் திறன் கொண்ட ஹெலினா ஏவுகணைகளை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது

இந்திய பாதுகாப்பு படைகளின் வலிமையை அதிகரிக்கும் வகையில் பல்வேறு ரக ஏவுகணைகளை டிஆர்டிஓ (DRDO) தயாரித்து வருகிறது. இதில் ஒன்றான ஹெலினா ஏவுகணை லடாக்கில் பனிமலை பகுதிகளில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதாக பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பான டிஆர்டிஓ தெரிவித்துள்ளது.

முன்னதாக ராஜஸ்தானின் பொக்ரான் பாலைவனப்பகுதியிலும் இந்த ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டிருந்தது. ஹெலினா ஏவுகணைகளை ஹெலிகாப்டரில் கொண்டு சென்று அதை வானிலிருந்தவாறே 7 கிலோ மீட்டர் தொலைவு வரை உள்ள எதிரி நாட்டு பீரங்கிகள் மீது ஏவி அழிக்க முடியும் என்று டிஆர்டிஓ தெரிவித்துள்ளது.



மழை, பலத்த காற்று என எந்த கால நிலையிலும் இரவு, பகல் என எந்த நேரத்திலும் இந்த ஏவுகணைகளை பயன்படுத்த முடியும் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து பாதுகாப்பு தளவாட இறக்குமதியை குறைத்துக்கொண்டு அவற்றை இயன்றவரை உள்நாட்டிலேயே தயாரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி ஹெலினா ஏவுகணைகள் முற்றிலும் உள்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com