கொரோனா தடுப்பூசி ஏற்றுமதிக்கு தடை என்பதில் உண்மையில்லை : மத்திய அரசு

கொரோனா தடுப்பூசி ஏற்றுமதிக்கு தடை என்பதில் உண்மையில்லை : மத்திய அரசு
கொரோனா தடுப்பூசி ஏற்றுமதிக்கு தடை என்பதில் உண்மையில்லை : மத்திய அரசு
Published on

வெளிநாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்வதை இந்தியா தற்காலிகமாக நிறுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், கொரோன தடுப்பூசி ஏற்றுமதிக்கு தடை ஏதும் விதிக்கப்படவில்லை என்றும் அடுத்த சில வாரங்களில் நேச நாடுகளுக்கு படிப்படியாக தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்படும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் தடுப்பூசி தயாரிக்கும் ஆற்றல், தேசிய தடுப்பூசி திட்டம் போன்றவற்றை கருத்தில் கொண்டு தடுப்பூசி வினியோகத்தை கட்டமைக்க வேண்டியிருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்யும்போது உள்நாட்டு தேவையையும் கருத்தில் கொள்ளவேண்டி இருப்பதால் அதற்கேற்ப மாறுபடும்.

இந்தியா வெளிநாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்வதை கடந்த ஜனவரி 20 ஆம் தேதி தொடங்கியது. இது வரை உலகெங்கும் உள்ள 75 நாடுகளுக்கு சுமார் 60 மில்லியன் டோஸ் தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மேலும் அதிகம் பேருக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்தவேண்டிய தேவை இருக்கிறது. வரும் ஒன்றாம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com