இந்தியா - கனடா உறவில் விரிசல்?

இந்தியாவை விட்டு அடுத்த 5 நாட்களில் வெளியேறும்படி கனடா தூதரக அதிகாரிக்கு மத்திய அரசு ஆணை.

சீக்கிய செயற்பாட்டாளரும், காலிஸ்தான் பிரிவினைவாத இயக்கத்தை சேர்ந்தவருமான ஹர்தீப் சிங், கடந்த ஜூன் 18-ம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டார். இவ்விவகாரத்தில் “இந்தியாவுக்கு தொடர்பு இருக்கக்கூடும் என தகவல்கள் உள்ளன” என்று கனடா பிரதமர் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தியா கனடா
அதிமுக- பாஜக கூட்டணி முறிவு: நடந்தது என்ன? முழு விவரம்

மேலும் இவ்விவகாரத்தில் இந்திய தூதரக அதிகாரியொருவரை வெளியேறுமாறு கனடா அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதுகுறித்து கனடாவில் உள்ள இந்திய தூதரகம் விளக்கம் எதுவும் கொடுக்கவில்லை. கனடா, காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவு அளித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துவந்த நிலையில் கனடாவின் இச்செயல் மீண்டும் உலக அரசியலில் பல விவாதங்களை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது கனடாவின் நடவடிக்கைக்கு இந்திய அரசு பதிலளித்துள்ளது. அதன்படி இந்தியாவை விட்டு அடுத்த 5 நாட்களில் வெளியேறும்படி கனடா தூதரக அதிகாரிக்கு மத்திய அரசு சார்பில் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு எதிராக செயல்படுவதுடன், இந்தியாவின் உள்நடவடிக்கைகளிலும் கனடா ஈடுபடுவதாக இந்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது. அடுத்தடுத்த இந்த சம்பவங்களால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com