“இந்தியாவில் ஆளில்லா இரயில் பாதைகளே இல்லை” - இரயில்வே 10 மாத சாதனை

“இந்தியாவில் ஆளில்லா இரயில் பாதைகளே இல்லை” - இரயில்வே 10 மாத சாதனை
“இந்தியாவில் ஆளில்லா இரயில் பாதைகளே இல்லை” - இரயில்வே 10 மாத சாதனை
Published on

ஒருநாளைக்கு 11 ஆளில்லா கேட்டுகளை குறிக்கோளாக வைத்து துரிதமாக இயங்கியதன் மூலம், கடந்த 10 மாதங்களில் நாட்டில் ஆளில்லா இரயில்வே கேட்டுகளே இல்லை என்ற நிலையை நாடு எட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது. 

ஆளில்லா ரயில்வே கேட் இந்தியாவில் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளதாக மத்திய அரசின் 2019 இடைக்கால பட்ஜெட்டில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் இரயில்வே துறையின் துரித முயற்சிகள்தான் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஏப்ரல் மாதம் 16 ஆம் தேதி உத்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள கப்டாங்கஜி- தவே ஆளில்லா இரயில்வே கேட்டில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மொத்தம் 13 பேர் உயிரழந்தனர். இந்த விபத்துதான் ஆளில்லா இரயில்வே கேட்டை முற்றிலுமாக அகற்ற வேண்டிய அழுத்தத்தை இரயில்வே துறைக்கு தந்தது. 

இதனையடுத்து இரயில்வே துறை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்தது. இதனால் ஆளில்லா இரயில்வே கேட் விபத்துகள் பெரிதும் குறைக்கப்பட்டதாக இரயில்வே துறை தெரிவித்துள்ளது. அதாவது நடப்பு நிதியாண்டில் 3 விபத்துகள் தான் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளில்லா இரயில்வே கேட் பல இடங்களில் இயந்திரங்கள் மற்றும் மனிதர்கள் மூலம் செயல்படும் கதவுகளாக மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் இரயில்கள் அதிகம் வந்துசெல்லும் பல்வேறு ரயில் பாதைகளில் தானாகவே செயல்படும் கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. ஆளில்லா இரயில்வே கேட்டை அகற்ற நான்கு வழிகளை இரயில்வே கையாண்டுள்ளது. 

அவை:

  • ஆளில்லா இரயில்வே பாதையை வேறு சில பாதைகளுடன் இணைத்து, போக்குவரத்தை சுலபமாக்குவது.
  • இரயில் பாதைக்கு கீழாக தனியாக சுரங்கப் பாதை அமைப்பது
  • இரயில் பாதைக்கு மேலாக பாலங்களைக் கட்டுவது 
  • முடியாத இடங்களில் கட்டாயம் ஆட்களை பணியில் அமர்த்துவது

இதைபோன்ற வழிகளில் இரயில்வே வேகமாக செயல்பட்டு, விபத்துக்களை தடுத்துள்ளது. இவற்றில் ஆட்களை இரயில்வே கேட்டில் ஆட்களை பணியில் அமர்த்துவது இரயில்வே துறைக்கு குறைந்த செலவு பிடிக்கும் காரியமாக இருந்துள்ளது.  

இதுகுறித்து இரயில்வே துறையின் செய்தித் தொடர்பாளர் “ஆளில்லா எல்லா இரயில்வே கேட்டிலும் எட்டுமணி நேர சுழற்சி முறையில் ஆட்கள் வேலை செய்து வருகிறார்கள். ஆளில்லா கேட்டில் கதவுகளை இயக்குவதற்கும், தொலைபேசி அழைப்புக்களை கையாள்வதற்கும் தனித்தனி முறைகளை கையாண்டுள்ளோம்”என்று தெரிவித்தார்.

அதேபோல, ஆளில்லா இரயில்வே கேட்டை அகற்றும் வரைக்கும் ‘கேட் மித்ராஸ்’ பணியாளர்களை வைத்து இது தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு அளித்து வருகிறோம் என்றும் கூறியுள்ளார். 

இதுகுறித்து இரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் “பாதுகாப்பு விஷயங்களில்தான் இரயில்வே துறையின் அதிக கவனம் செலுத்தி வருகிறது” எனத் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில்,  இன்று பீகாரில் பயணிகள் ரயில் தடம்புரண்டதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தது குறிப்பிடதக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com