மத சுதந்திரம் குறித்து இந்தியா மீது புகார் அளித்த அமெரிக்க அரசு அமைப்பு... மத்திய அரசு கண்டனம்!

மத சுதந்திரம் குறித்து இந்தியா மீது அமெரிக்க அரசு அமைப்பு கூறிய புகார் விஷமத்தனமானது என மத்திய அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்தியா  - அமெரிக்கா
இந்தியா - அமெரிக்காமாதிரிப்படம்
Published on

அமெரிக்க அரசால் நியமிக்கப்பட்ட சர்வதேச மத சுதந்திர ஆணையம் (The United States Commission on International Religious Freedom - USCIRF), “இந்தியாவில் மத சுதந்திரம் மோசமடைந்து வருகிறது. எனவே சிந்திக்கப்பட வேண்டிய நாடுகள் பட்டியலில் இந்தியாவை சேர்க்க அமைச்சகத்திற்கு பரிந்துரைக்க உள்ளோம். மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போதிலிருந்தே எங்கள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு இந்தியா விசா அளிக்க மறுத்துவருகிறது” என தங்கள் அறிக்கையில் கூறியிருந்தது. சர்ச்சைக்குரிய இந்த அறிக்கைக்கு இந்தியா தற்போது கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளது.

The United States Commission on International Religious Freedom (USCIRF)
The United States Commission on International Religious Freedom (USCIRF)

அந்தவகையில் வெளியுறவுத்துறை செயலாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “மத சுதந்திரம் குறித்து இந்தியா மீது அமெரிக்க அரசு அமைப்பு கூறிய புகார் விஷமத்தனமானது. சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் என்ற அமைப்பு அரசியல் நோக்கத்துடன் இந்தியா மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் ஓர் அமைப்பு.

இந்தியா  - அமெரிக்கா
ஹரியானா சட்டமன்ற தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரத்தில் குதித்த சேவாக்!

அமெரிக்க அமைப்பு, இந்தியா குறித்து தவறான திரிக்கப்பட்ட தகவல்களுடன் தொடர்ந்து அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. அதை முற்றிலும் நிராகரிக்கிறோம். அமெரிக்க அமைப்பு இந்தியா மீது குற்றஞ்சாட்டி நேரத்தை வீணடிப்பதை விட அவர்கள் நாட்டில் மனித உரிமை பிரச்னைகளுக்கு தீர்வு காண முயற்சிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com