எல்லையில் இந்தியா - சீனா இடையே புதிதாக மோதல் ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
லடாக் அருகே உள்ள இந்திய - சீன எல்லைப் பகுதியில் கடந்த ஜூன் மாதம் வெடித்த மோதல் காரணமாக இரு நாட்டுக்கும் இடையிலான நட்புறவில் விரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், லடாக் பகுதியில் கடந்த திங்கள்கிழமை இரவு மீண்டும் இருநாட்டு துருப்புகளும் மோதலில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீன ராணுவம் இந்திய பகுதியை நோக்கி நெருங்கி வந்ததாக இந்திய ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இரு நாட்டு துருப்புகளும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் பரஸ்பரம் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.