உலகிலேயே மிக மோசமான நிலையில் இந்திய பொருளாதாரம் இருப்பதாக பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றிய உரையாற்றிய நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜி கூறுகையில், ‘’ உலகின் மிக மோசமாக செயல்படும் பொருளாதாரங்களில் இந்தியாவும் உள்ளது. மேலும் சிக்கலைச் சமாளிக்க அரசின் பொருளாதார தூண்டுதல் போதுமானதாக இல்லை.
கொரோனா தொற்றுநோய்க்கு முன்பே நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்து விட்டது. எவ்வாறாயினும், நடப்பு நிதியாண்டின் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் நாடு வளர்ச்சியில் புத்துயிர் பெறும். 2021 ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டை விட சிறப்பாக இருக்கும்’’ என்று கூறினார்.