I.N.D.I.A கூட்டணி எம்.பி.க்கள் ஆலோசனை - ராமர் கோவில் விவகாரத்தை கையில் எடுக்க முடிவா?

காங்கிரஸ் தலைவர் மல்லிகாஜுன கார்கே தலைமையில் I.N.D.I.A கூட்டணி எம்பிகள் இன்று ஆலோசனை நடத்தினர்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் நிறைவு நாளான இன்று காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை நடத்தினார்கள். காங்கிரஸ் தலைவர் மல்லிகாஜுன கார்கே தலைமையில் இந்த ஆலோசனை கூட்டமானது நடைபெற்றது.

மல்லிகாஜுன கார்கே
மல்லிகாஜுன கார்கே

இன்று நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் அயோத்தி ராமர் ஆலயம் தொடர்பாக தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து இரண்டு அவைகளிலும் கொண்டுவரப்படும் இந்த தீர்மானத்தை எத்தகைய நோக்குடன், எத்தகைய நிலைப்பாட்டுடன் அணுகவேண்டும் என்று I.N.D.I.A கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை நடத்தினார்கள் என காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் தகவல் அளித்துள்ளனர்.

அத்துடன் இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர்க்கு பிறகு எப்படி ஆலோசனைகளை தொடர்வது என்பது தொடர்பாகவும் இன்று ஆலோசனை நடந்தது. பட்ஜெட் கூட்டத்தொடர் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், ‘அயோத்திய ராமர் கோவில் மட்டுமே இன்று அவையில் நடக்கிறது’ என்பது எதிர்க்கட்சிகளின் கருத்து.

மக்களவைத் தேர்தலுக்கு முந்தைய தொடர் என்பதால் இந்த கூட்டத்தொடரில் தொடரில் அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தை மத்திய அரசை சார்ந்தவர்கள், குறிப்பாக பாரதிய ஜனதா கட்சியை சார்ந்தவர்கள் வலுவாக முன்வைத்து வலியுறுத்த விரும்புவதாக எதிர்க்கட்சிகள் கருதுகின்றன. இதுகுறித்து விவாதிக்கவே இன்று ஆலோசனை கூட்டம் நடந்ததாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் அரசியலில் இது எதிரொலிக்கும் என எதிர்ப்பார்க்கலாம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com