கர்தார்பூர் வழித்தட திட்டம் - இந்தியா- பாக். 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை

கர்தார்பூர் வழித்தட திட்டம் - இந்தியா- பாக். 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை
கர்தார்பூர் வழித்தட திட்டம் -  இந்தியா- பாக். 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை
Published on

கர்தார்பூர் வழித்தட திட்டம் தொடர்பாக இந்தியா, பாகிஸ்தான் இடையே மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தையில் திட்டத்துக்கான வரைவு ஒப்பந்தம் குறித்து பேசப்பட்டு வருகிறது.

சீக்கிய மதத்தை தோற்றவித்த குருநானக், பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூரில் 19 ஆண்டுகள் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. அவர் நினைவாக இந்திய எல்லையில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் ராவி நதிக்கரையில் உள்ள கர்தார்பூரில் ‘தர்பார் சாஹிப்’ என்ற பெயரில் குருத்வாரா அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சிக்கியர்கள் விசா இன்றி புனிதப் பயணம் மேற்கொள்ள இந்தியாவின் குருதாஸ்பூரையும் - பாகிஸ்தானின் கர்தார்பூரையும் இணைக்க சாலை அமைக்கப்பட்டது. 

இதுதொடர்பாக இந்தியா - பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் கர்தார்பூர் வழித்தட திட்டத்துக்கான வரைவு ஒப்பந்தம் குறித்து மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசின் அட்டாரியில் பாகிஸ்தானை சேர்ந்த 20 அதிகாரிகளும் இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 

இந்தியர்கள் கர்தார்பூர் குருத்வாராவுக்குச் செல்ல 90 சதவிகிதப் பணிகள் முடிவடைந்ததாக பாகிஸ்தான் அதிகாரிகள் குழுவின் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக தெரிவித்துள்ளனர். இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் வரும் நவம்பரில் குருநானக்கில் 550ஆவது பிறந்தநாளை கொண்டாடப்படுவதையொட்டி, கர்தார்பூர் வழித்தடத்தை திறக்கம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com