பாதுகாப்புப் படை வீரர்களின் வாரிசுகளுக்கான உதவித்தொகை அதிகரிப்பு

பாதுகாப்புப் படை வீரர்களின் வாரிசுகளுக்கான உதவித்தொகை அதிகரிப்பு
பாதுகாப்புப் படை வீரர்களின் வாரிசுகளுக்கான உதவித்தொகை அதிகரிப்பு
Published on

பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தால் அவர்களுடைய வாரிசுகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற பிறகு முதல் அமைச்சரவை கூட்டம் இன்று தொடங்கியது. இதில் பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தால் அவர்களுடைய வாரிசுகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது.

கடற்படை, விமானப்படை ஆகியவற்றில் பணியாற்றும் வீரர்கள் பணிக்காலத்தில் வீரமரணம் அடைந்தால் அவர்களுடைய மகன் அல்லது மகளுக்கு படிப்பதற்காக உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகை பெண் குழந்தைகளுக்கு மாதம் 2250 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதை ரூ. 3000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் ஆண் குழந்தைகளுக்கு 2000 ரூபாயிலிருந்து 2500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

இதுதவிர பாதுகாப்பு படையினர், மட்டுமல்லாமல் போலீஸ் படையை சேர்ந்தவர்களாக இருந்தாலும் தீவிரவாத தாக்குதலிலோ அல்லது நக்சல் தாக்குதலிலோ உயிரிழந்தால் அவர்களுடைய மகள் அல்லது மகன்களுக்கு கூட இந்த உதவித்தொகை கிடைக்கும் என முடிவு செய்யப்பட்டிருக்கிறது. தேசிய பாதுகாப்பு நிதித்தொகையில் இருந்து இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com