செல்போன்களில் அழைப்பு ஒலி நேரம் 30 நொடிகள்: சர்ச்சையை முடித்த டிராய்

செல்போன்களில் அழைப்பு ஒலி நேரம் 30 நொடிகள்: சர்ச்சையை முடித்த டிராய்
செல்போன்களில் அழைப்பு ஒலி நேரம் 30 நொடிகள்: சர்ச்சையை முடித்த டிராய்
Published on

செல்போன்களின் அழைப்பு ஒலி நேரம் 30 நொடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அழைப்பு ஒலி நேரம் தொடர்பாக செல்போன் நிறுவனங்களிடையே சர்ச்சை ஏற்பட்ட நிலையில் இந்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

செல்போனில் ஒருவரை அழைக்கும் போது அதற்கான ஒலி நீடிக்கும் நேரமே அழைப்பு ஒலி நேரம் எனப்படுகிறது. இந்தியாவில் இதுவரை அழைப்பு ஒலி நேரம் இவ்வளவு நேரம்தான் இருக்க வேண்டும் என்ற வரையறை எதுவும் இல்லாமல் இருந்தது. எனவே செல்போன் நிறுவனங்கள் அழைப்பு ஒலி நேரத்தை 30 நொடிகள் முதல் 45 நொடி வரை நிர்ணயித்து சேவை அளித்து வந்தன. அழைப்பு ஒலி நேரத்தில் முறைகேடாக பயன்படுத்தி ஆதாயம் அடைவதாக மொபைல் ஃபோன் நிறுவனங்களுக்குள் சர்ச்சை நிலவி வந்தது. 

இந்நிலையில் சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் புதிய விதிமுறையை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை நிறுவனமான டிராய் வெளியிட்டுள்ளது. இதன்படி செல்போன்களில் இன்கமிங் அழைப்பு ஒலி நேரம் 30 நொடியாக இருக்க வேண்டும் என்றும் லேண்ட்லைன் போன்களில் இது 60 நொடியாக இருக்க வேண்டும் என்றும் டிராய் தெரிவித்துள்ளது.

இந்த உத்தரவு இன்னும் 15 நாட்களில் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அழைப்பு ஒலி நேரத்தை 20 முதல் 25 நொடியாக நிர்ணயிக்க வேண்டும் என ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்திருந்தது. ஆனால் அழைப்பு ஒலி நேரம் 30 முதல் 70 நொடிகளுக்குள் இருக்க வேண்டும் என ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்கள் வலியுறுத்தியிருந்தன
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com