தேர்தல் ஆணையர் அசோக் லவாசா மனைவிக்கு வருமான வரி துறை நோட்டீஸ்

தேர்தல் ஆணையர் அசோக் லவாசா மனைவிக்கு வருமான வரி துறை நோட்டீஸ்
தேர்தல் ஆணையர் அசோக் லவாசா மனைவிக்கு வருமான வரி துறை நோட்டீஸ்
Published on

தேர்தல் ஆணையர் அசோக் லவாசாவின் மனைவிக்கு வருமான வரி துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையர் அசோக் லவாசா. இவர், கடந்த மக்களவைத் தேர்தலின் போது, தலைமை தேர்தல் ஆணையாளர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையாளர் சுசில் சந்திரா ஆகியோரின் கருத்துக்களில் இருந்து வேறுபட்டார். ’தேர்தல் நடத்தை விதி மீறல்கள் தொடர்பான முடிவுகளில் தன்னுடைய கருத்துகள் ஏற்கப்படவில்லை’ என பரபரப்பு புகார் கூறியிருந்தார். தேர்தல் ஆணையம் தொடர்பான கூட்டங்களில் பங்கேற்கப் போவதில்லை என்றும் தெரிவித்திருந்தார். இது அப்போது பரபரப்பானது. இந்நிலையில், அசோக் லவாசாவின் மனைவி நோவக் (Novel) லவசாவுக்கு வருமான வரி துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

நோவல், பல நிறுவனங்களில் இயக்குனராக பணியாற்றியுள்ளார். அன்னிய செலாவணி தொடர்பாக அவர் தாக்கல் செய்த வருமான வரி கணக்கில், முரண்பாடு இருப்பதால், அது தொடர்பாக விளக்கமளிக்க வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

இதுபற்றி நோவல் கூறும்போது, தனது ஓய்வூதியம் மற்றும் இதர வருமானங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் வருமான வரித்துறைக்கு தெரிவித்துவிட்டேன். ஆகஸ்ட் 5 ஆம் தேதியில் இருந்து பெறப்பட்ட வருமான வரித்துறை நோட்டீஸ்களுக்கு பதில் அளித்துவிட்டேன். தற்போது நடக்கும் விசாரணைக்கும் ஒத்துழைப்பு அளிக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com