மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. கடந்த 28 நாட்களில் சபரிமலைக்கு மொத்த வருமானமாக 134 கோடியே 45 லட்சம் ரூபாய் கிடைக்கப் பெற்றுள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
கடந்தாண்டு இதே கால கட்டத்தில் 154 கோடியே 78 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்ததாகவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நடப்பாண்டில் கடந்த 28 நாட்களில் சபரிமலையில் வழங்கப்படும் பிரசாதமான அப்பம் 8 கோடியே 99 லட்சம் ரூபாய்க்கும், அரவணை பிரசாதம் 61 கோடியே 91 லட்சத்திற்கும் விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்டியல் காணிக்கையாக 40 கோடியே 80 லட்சம் கிடைத்துள்ளதாகவும் கோயில் நிர்வாகம் கூறியுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் டிசம்பர் 14ஆம் தேதி வரை 17 லட்சத்து 57 ஆயிரத்து 730 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாகவும் திருவிதாங்கூர் தேவஸம் போர்டு தெரிவித்துள்ளது.