கடந்த ஒரே வாரத்தில், 70க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில், விமானப் போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் சார்பில் இந்திய விமான நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், விமானங்களுக்கு விடுக்கப்படும் வெடிகுண்டு மிரட்டல்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டன. அதன்படி, கடந்த வாரம் ஏர் இந்தியா, விஸ்தாரா, இண்டிகோ, அகாசா ஏர், ஸ்பைஸ் ஜெட், ஸ்டார் ஏர், அலையன்ஸ் ஏ உள்ளிட்ட நிறுவனங்களைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததாகவும், இதில் பெரும்பாலானவை வதந்தி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று ஒரே நாளில் 30க்கும் அதிகமான விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் மீதான நடவடிக்கைகளை கடுமையாக்க மத்திய விமான போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.