இந்த மாதம் கடந்த 14 நாட்களில் மட்டும் நாடு முழுவதும் 18.52 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்தியாவின் கடந்த ஓராண்டு கொரோனா பாதிப்பு நிலவரத்தை விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தான் முதல் கொரோனா பாதிப்பு பதிவானது. கடந்த ஓராண்டு என கணக்கிட்டால் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 32 ஆயிரத்து 213 பேர் கொரோனா தொற்று உறுதியானது. இதுவே மே மாதத்தில் 1.48 லட்சம் என்ற அளவை எட்டியது. ஜூன் மாதத்தில் புதிதாக 3 லட்சத்து 84 ஆயிரத்து 607 பேருக்கு பாதிப்பு உறுதியானது. ஜூலை மாதத்தில் மட்டும் இந்தியாவில் 10 லட்சத்து 72 ஆயிரம் பாதிக்கப்பட்டனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாடு முழுவதும் 19 லட்சத்து 82 ஆயிரத்து 375 பேருக்கு பாதிப்பு உறுதியானது. இந்தியாவில் செப்டம்பர் மாதத்தில் மட்டும் புதிதாக 26 லட்சம் பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டு புதிய உச்சத்தை எட்டியது.
அக்டோபர் மாதத்தில் இந்த எண்ணிக்கை 19 லட்சத்து 11 ஆயிரத்து 356 ஆகவும், நவம்பரில் 12 லட்சத்து 94 ஆயிரத்து 842 ஆகவும் குறைந்தது. டிசம்பரில் 8 லட்சத்து 34 ஆயிரத்து 983 பேருக்கு புதிதாக பாதிப்பு உறுதியானது. நடப்பாண்டு ஜனவரி மாதம் இந்த எண்ணிக்கை 4 லட்சத்து 79 ஆயிரத்து 509 என குறைந்தது. பிப்ரவரியில் மீண்டும் 3.5 லட்சமாக குறைந்த மாதவாரியான பாதிப்பு மார்ச் மாதத்தில் 10 லட்சத்து 52 ஆயிரம் என மீண்டும் உச்சத்தை எட்டியது. இந்த ஏப்ரல் மாதத்தில் கொரோனா பரவல் இதுவரை இல்லாத அளவுக்கு வேகமாக உள்ளது. கடந்த 14 நாட்களில் மட்டும் 18 லட்சத்து 52 ஆயிரத்து 899 பேருக்கு நாடு முழுவதும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.