உ.பி.யில் யோகி பதவியேற்ற 6 மாதங்களில் 430 என்கவுண்டர்கள்

உ.பி.யில் யோகி பதவியேற்ற 6 மாதங்களில் 430 என்கவுண்டர்கள்
உ.பி.யில் யோகி பதவியேற்ற 6 மாதங்களில் 430 என்கவுண்டர்கள்
Published on

உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர், குற்றங்களைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அந்த வகையில், கடந்த ஆறு மாதங்களில் 430-க்கும் அதிகமான என்கவுண்டர்கள் நடந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு 12 மணிநேரத்திற்கு ஒரு என்கவுண்டர் வீதம் மொத்தம் 430-க்கும் அதிகமான என்கவுண்டர்கள் நடத்தப்பட்டுள்ளது என்றும், இத்தகைய என்கவுண்டரில் ஈடுபட்ட மாவட்ட போலீஸ் குழுவிற்கு 1 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. கடந்த 6 மாதங்களில் குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால், தற்போது பொதுமக்கள் பாதுகாப்பாக உணர்வதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

அரசு வெளியிட்ட புள்ளி விவரத்தில், மார்ச் 20 முதல் செப்டம்பர் 18 வரை நடத்தப்பட்ட 431 என்கவுண்டர்களில், 17 குற்றவாளிகள் கொல்லப்பட்டுள்ளனர். 2 காவல்துறையினர் உயிரிழந்துள்ளனர், 88 பேர் காயம் அடைந்துள்ளனர் என்றும், 1106 குற்றவாளிகள் பிடிபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com