மகாராஷ்டிரா வாக்கு எண்ணிக்கை | பாஜக முன்னிலை.. “இது எப்படி சாத்தியம்?” - சஞ்சய் ராவத் கேள்வி!

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான மஹாயுதி கூட்டணி முன்னிலை பெற்றுள்ள நிலையில், சிவசேனா (யுபிடி) தலைவர் சஞ்சய் ராவத், ”தேர்தல் முடிவுகள் ஒரு சதித்திட்டத்தை சுட்டிக்காட்டுகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.
சஞ்சய் ராவத்
சஞ்சய் ராவத்எக்ஸ் தளம்
Published on

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த நவம்பர் 20ஆம் தேதி, ஒரேகட்டமாக 288 தொகுதிகளைக் கொண்ட மகராஷ்டிரா சட்டப்பேரவைக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. மஹாயுதி கூட்டணியில் பாஜக 149 இடங்களிலும், முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 81 இடங்களிலும், துணை முதல்வர் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 59 இடங்களிலும் போட்டியிட்டுள்ளன.

மகா விகாஸ் அகாடி கூட்டணியில் காங்கிரஸ் 101 இடங்களிலும், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 95 இடங்களிலும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 86 இடங்களிலும் போட்டியிட்டன. இதனால் தொடக்கம் முதலே இரண்டு கூட்டணிக்கும் கடுமையான போட்டி நிலவியது. இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (நவ.23) நடைபெற்று வருகிறது. அதன்படி, பாஜக அங்கம் வகிக்கும் மஹாயுதி கூட்டணி அமோக வெற்றிபெற்றுள்ளது. தற்போது வரை அக்கூட்டணி 220க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் உள்ளது.

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான மஹாயுதி கூட்டணி முன்னிலை பெற்றுள்ள நிலையில், சிவசேனா (யுபிடி) தலைவர் சஞ்சய் ராவத், “தேர்தல் முடிவுகள் ஒரு சதித்திட்டத்தை சுட்டிக்காட்டுகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.

சஞ்சய் ராவத்
மகாராஷ்டிரா| தவறான கருத்துக்கணிப்பா? ஹரியானாவைப்போல் மாற வாய்ப்பு? ஆய்வில் வெளியான புதிய தகவல்!

இதுகுறித்து அவர், “இதில் ஒரு பெரிய சதி இருப்பதை நான் காண்கிறேன். தேர்தல் முடிவை மக்கள் ஆணையாக தங்கள் கட்சி ஏற்காது. தேர்தல் முடிவுகளில் ஏதோ நடந்துள்ளது. இந்த ஆணையை எப்படி ஏற்றுக்கொள்வது என்று மக்கள்கூட யோசித்துக் கொண்டிருக்க வேண்டும். தேர்தலில் பணம் பயன்படுத்தப்பட்டது என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் அனைத்து எம்எல்ஏக்களும் எப்படி வெற்றி பெற முடியும்? மகாராஷ்டிராவை துரோகத்துக்கு ஆளாக்கிய அஜித் பவார் எப்படி வெற்றி பெற முடியும்?” எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சஞ்சய் ராவத்தின் இந்தக் கருத்துக்கு பாஜக தலைவர் பிரவின் தரேகர் பதிலடி கொடுத்துள்ளார். அவர், "சஞ்சய் ராவத் தனது விமானத்தை தரையில் தரையிறக்க வேண்டும். மாநிலத்திலும் மத்தியிலும் பாஜக ஆட்சி இருக்கும்போது மகாராஷ்டிரா மேலும் முன்னேறும். மகாராஷ்டிராவின் முதலமைச்சராக தேவேந்திர ஃபட்னாவிஸ் பதவியேற்பார். பொதுமக்கள் பாஜக கூட்டணிக்கு வாக்களித்ததற்கு இதுவே காரணம்” எனத் தெரிவித்துள்ளார்.

சஞ்சய் ராவத்
மகாராஷ்டிரா | பணம் விநியோக குற்றச்சாட்டு.. ரூ.100 கோடி கேட்டு ராகுலுக்கு பாஜக அவதூறு நோட்டீஸ்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com