வெள்ளை நிறத்தில் கன்றுக்குட்டியை ஈன்ற எருமை மாடு! திகைக்கும் மக்கள்.. மாற்றம் நிகழ்ந்தது எப்படி?

ராஜஸ்தானில் விவசாயி ஒருவர் வளர்த்துவந்த எருமை வெள்ளை நிறத்தில் கன்று ஈன்றிருப்பதைக் காண ஊர் மக்கள் படையெடுத்து வருகின்றனர்.
ராஜஸ்தான் எருமை
ராஜஸ்தான் எருமைஎக்ஸ் தளம்
Published on

ராஜஸ்தான் மாநிலம் கரவுளியைச் சேர்ந்தவர் நீரஜ் ராஜ்புத். விவசாயியான இவர்,சொந்தமாக எருமை மாடுகளை பராமரித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த ஜூலை 17ஆம் தேதி, அவர் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த எருமை மாடு ஒன்று, கன்றினை ஈன்றது.

இந்தக் கன்றுக்குட்டியைப் பார்க்க அந்தக் கிராம மக்களே அவ்வீட்டுக்கு படையெடுத்து வருகின்றனராம். அதற்குக் காரணம், முழுக்க முழுக்க அந்தக் கன்றுக்குட்டி வெள்ளை நிறத்தில் இருப்பதுதான். ஒரு இடத்தில்கூட கரும்புள்ளி இல்லாதது வியப்பாகப் பார்க்கப்படுகிறது. இதனால் அவ்வூர் மக்கள் இதை, ‘எட்டாவது அதிசயம்’ என அழைக்கின்றனர். மேலும், எருமை அதன் நிறத்தில் கன்றுவை ஈன்றாதது குறித்தும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அந்த எருமை மாட்டுக்குச் சொந்தக்காரரான நீரஜ் ராஜ்புத், ”இந்த நாட்டு இன எருமை மாடு இப்போதுதான் முதன்முறையாக குட்டியை ஈன்றுள்ளது. எருமை மாடு கன்றுக்குட்டியை ஈன்றதுமே, வெள்ளை நிறத்தில் பிறந்த கன்றுக்குட்டியைப் பார்த்து நாங்கள் ஆச்சரியம் அடைந்தோம். இந்த கன்றுக்குட்டி பிறந்ததில் இருந்தே ஆரோக்கியமாக உள்ளது. அதன் தாய், தன்னுடைய குட்டியை மிகவும் அரவணைத்து கவனமாக பார்த்துக் கொள்கிறது. இதைப் பார்ப்பதற்காக பக்கத்து ஊர்களிலிருந்தும் மக்கள் படையெடுத்து வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: கர்நாடகாவில் நிகழ்ந்த அதிசயம்| கொலையாளியை பிடிக்க 8 கிமீ தூரம் ஓடி மற்றொரு கொலையை தடுத்த மோப்ப நாய்!

ராஜஸ்தான் எருமை
கன்று ஈன சிரமப்பட்ட பசு மாடு! - மனிதநேய செயலால் பார்த்தோரை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய நபர்!

இதுகுறித்து கால்நடை மருத்துவர் பிரம்ம பிரகாஷ் பாண்டே, “அல்பினிசம் என்ற மரபணு கோளாறு காரணமாக இப்படி எருமை கன்றுக்குட்டி பிறந்திருக்கலாம். பொதுவாக கண்கள், முடி மற்றும் தோலில் ஒரு சில இடங்களில்தான் இந்த மரபணு கோளாறு பிரதிபலிக்கும். ஆனால் உடல் முழுவதும் முற்றிலும் நிறமற்றதாக இருப்பது மிகவும் அரிதானது. இதுபோன்ற நிகழ்வுகள் ஆயிரத்தில் ஒன்றாகத்தான் இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் எருமையின் தோலில் மெலனின் குறைபாடு உள்ளதால்தான் இப்படி வெள்ளையாக பிறந்திருக்கும் என்று மருத்துவ காரணமும் சொல்லப்படுகிறது. அதாவது, இதுபோன்ற உயிரினங்களுக்கு உடம்பில் மெலனின் சுரக்காவிட்டால், இப்படி வெள்ளை கலரில் நிறம் மாற வாய்ப்புண்டு. இப்படிப் பிறக்கும் விலங்குகளை அல்ஃபினோ வகை விலங்குகள் எனப்படும். அதுவும், 10,000 உயிரினங்களில் ஒரு உயிரினம்தான் இப்படி பிறக்கும்தான் எனக் கூறப்படுகிறது. இன்னொரு புறம், சினை பிடிப்பதற்காகப் வெளிநாடுகளில் இருந்து தருவிக்கப்படும் ஊசியால், அதாவது அங்குள்ள கலப்பின மாடுகளில் இருந்து பெறப்பட்ட விந்தணு கலந்து வந்திருக்கலாம் என வேறொரு காரணமும் சொல்லப்படுகிறது.

கடந்த மே மாத தொடக்கத்தில், கரூர் மாவட்டம் நொய்யல் அருகே சேமங்கி பகுதியில் முருகேசன் என்பவரது எருமை மாடும் ஒன்றும் இதேபோன்று வெள்ளை நிறத்தில் கன்று ஈன்றிருந்தது என்பதும் இந்த கன்றுக்குட்டியைப் பார்ப்பதற்கும் மக்கள் படையெடுத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ”அரசு ஆதரவு மதவெறி”-உ.பி. கன்வார் யாத்திரை.. வழியில் உள்ள கடைகளில் உரிமையாளர் பெயர்களை எழுத உத்தரவு!

ராஜஸ்தான் எருமை
பிரேசிலில் இரட்டை தலையுடன் பிறந்த கன்று குட்டி: 4வது நாளில் நிகழ்ந்த சோகம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com