பஞ்சாப் மாநிலம் போத்பூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர், வழக்கு தொடர்பாக ஒரு நபரை கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து அடைத்துள்ளார். இதன்பின் மீண்டும் காவல் நிலையம் சென்று பார்த்தபோது அந்த கைதி காணாமல் போனதால், சக காவலர்களிடம் கேட்டபோது மழுப்பலாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர், நெடுஞ்சாலை சந்திப்பில் நான்கு புறமும் கயிறு கட்டி போக்குவரத்தை நிறுத்தி சாலையில் படுத்து போராடியுள்ளார். தான் கஷ்டப்பட்டு திருடர்களை பிடித்தால் மற்ற காவலர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு அந்த திருடர்களை விட்டு விடுவதாக குற்றம் சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டை காவல் நிலைய பொறுப்பாளர் மறுத்துள்ளார். சம்பந்தப்பட்ட கைதி ஜாமினில் விடுவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.