கழுத்தளவு தண்ணீரில் சிக்கிய கர்ப்பிணி – மரக்கட்டை, டயர்களால் ஆன படகில் மீட்ட மக்கள்

கழுத்தளவு தண்ணீரில் சிக்கிய கர்ப்பிணி – மரக்கட்டை, டயர்களால் ஆன படகில் மீட்ட மக்கள்
கழுத்தளவு தண்ணீரில் சிக்கிய கர்ப்பிணி – மரக்கட்டை, டயர்களால் ஆன படகில் மீட்ட மக்கள்
Published on

பீகார் வெள்ளத்தில் கழுத்தளவு தண்ணீரில் சிக்கிய கர்ப்பிணிப்பெண்ணை பிரசவத்துக்காக மரக்கட்டை மற்றும் டயரால் செய்யப்பட்ட படகில் மீட்ட புகைப்படங்கள் நெகிழ்ச்சியை உருவாக்கியுள்ளது.

பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டம் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்ப்பதற்காக கழுத்தளவு தண்ணீரில் மரக்கட்டைகள் மற்றும் டயர் டியூப்களால் செய்த படகின் மூலமாக அப்பகுதி மக்கள் மீட்டு அழைத்து வந்தனர். அம்மாவட்ட நீதிமன்ற அலுவலகத்துக்கு இந்த தகவல் தெரிந்ததும், அவர்கள் பேரிடர் மீட்புப்படையின் படகு மூலமாக மீட்டு அந்த பெண்ணை அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.  

பீகாரிலுள்ள தர்பங்கா மாவட்டம் வெள்ளம் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோலவே தெங்கா, முசாபர் நகர், ஹயாகட், சிதாமர்கி போன்ற மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பீகாரின் பல நதிகள் பெரும் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடுகின்றன. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com