பள்ளி வகுப்பறைகளாக மாறிய ரயில் பெட்டிகள் - அதிகாரிகளின் சூப்பர் பிளான்..!

பள்ளி வகுப்பறைகளாக மாறிய ரயில் பெட்டிகள் - அதிகாரிகளின் சூப்பர் பிளான்..!
பள்ளி வகுப்பறைகளாக மாறிய ரயில் பெட்டிகள் - அதிகாரிகளின் சூப்பர் பிளான்..!
Published on

மைசூரில் உபயோகம் முடிந்த இரண்டு ரயில் பெட்டிகளை, தொடக்க மாணவர்களின் வகுப்பறையாக அதிகாரிகள் மாற்றியுள்ளனர்.

மைசூரின் அசோகபுரத்தில் உள்ள ரயில்வே காலனியில் கடந்த 20 ஆண்டுகளாக தொடக்கப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் சுமார் 60 மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆரம்ப காலம் முதலே பள்ளிக்கட்டடம் இல்லாததால் ரயில்வே குடியிருப்பின் கட்டடம் மற்றும் அறைகளுக்குள் வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்தன.

இந்த மழலை மாணவர்களுக்கு வகுப்பறைகள் அமைத்துக்கொடுக்க வேண்டும் என ரயில்வே அதிகாரிகள் மற்றும் குடியிருப்பினர் முடிவு செய்தனர். அதன்படி, தென்மேற்கு ரயில்வே தலைமை மேலாளரான ஸ்ரீநிவாசு என்பவரின் ஆலோசனைப்படி, உபயோகம் முடிந்த இரண்டு ரயில் பெட்டிகளை மாணவர்களுக்கான வகுப்பறையாக தயார் செய்தனர். இதற்காக ரயில்வே ஊழியர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்களிடம் நிதி சேகரிக்கப்பட்டது. அதன்படி, கிடைத்த தொகையைக்கொண்டு ரூ.50 ஆயிரம் செலவில் ரயில் பெட்டிகளை வகுப்பறையாக தயார் செய்தனர்.

வெளிப்புறத்தில் வண்ணமயமான ஓவியங்கள் மற்றும் உட்புறத்திலும் அறிவை வளர்க்கும் வரைபடங்களை அமைத்தனர். இரண்டு பெட்டிகளுக்கும் படிக்கெட்டுகள் அமைக்கப்பட்டன. அத்துடன் வகுப்பறைக்கு ஏற்றாற்போல இருக்கைகள் நீக்கப்பட்டு, மின்விசிறிகள் மேலே அமைக்கப்பட்டன. மேலும், இரண்டு பயோ கழிவறைகளும் வெளிப்புறத்தில் அமைக்கப்பட்டுள்ளன. ரயில்வே அதிகாரிகளின் இந்த அசத்தல் ஆலோசனையால், அந்த பள்ளியில் வகுப்பறை இன்றி தவித்த 4 மற்றும் 5 வகுப்பு மாணவர்களுக்கு தற்போது நிரந்தர வகுப்பறை கிடைத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com