"இந்தியாவில் 2030க்குள் 100% எலக்ட்ரிக் வாகனங்கள்" அமைச்சர் தகவல்

"இந்தியாவில் 2030க்குள் 100% எலக்ட்ரிக் வாகனங்கள்" அமைச்சர் தகவல்
"இந்தியாவில் 2030க்குள் 100% எலக்ட்ரிக் வாகனங்கள்" அமைச்சர் தகவல்
Published on

இந்தியாவில், 2030 ஆம் ஆண்டிற்குள் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத ‌வகையில் 100 சதவீத எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு நடைமுறைப்படுத்தப்படும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

தரமணியில் உள்ள சிஎஸ்ஐஆர் மையத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று பேசிய அவர், புவி வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவை இந்தியா மட்டுமல்லாமல் உலகமே சந்தித்துவரும் பிரச்னைகள் என்றார். இதனால், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வாகனங்களை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்திய அவர், புதியதாக உருவாக்கப்பட்ட லித்தியம் அயர்ன் பேட்டரி வாகனத்தை அறிமுகம் செய்துவைத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com