நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் முன்னாள் நிலக்கரித்துறை செயலாளர் ஹெச்.சி.குப்தா மற்றும் இரு அதிகாரிகளுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் மூவருக்கும் 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட மற்ற மூவருக்கும் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்காள மாநிலத்தில் நிலக்கரி சுரங்கங்களை தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது.
2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சுமார் 40 வழக்குகளை சிபிஐ விசாரித்து வருகிறது. இதில் ஒரு வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பிலும் நிலக்கரித் துறை செயலாளர் குப்தாவுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டு அவர் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார்.