ஆந்திராவில் அரசு ஊழியர்கள் ஓய்வு வயது 62 ஆக உயர்வு

ஆந்திராவில் அரசு ஊழியர்கள் ஓய்வு வயது 62 ஆக உயர்வு
ஆந்திராவில் அரசு ஊழியர்கள் ஓய்வு வயது 62 ஆக உயர்வு
Published on

ஆந்திராவில் அரசு ஊழியர்கள் ஓய்வு வயதை 62 ஆக உயர்த்த அந்த மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஊழியர்களின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் புதிய ஊதிய ஆணைய பரிந்துரைகளை அமல்படுத்தவும் ஒப்புதல் அளிகப்பட்டுள்ளது. அந்திர அமைச்சரவை அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. இதில் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 62 ஆக உயர்த்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ஆந்திராவில் புதிய ஊதிய ஆணைய பரிந்துரைகளை அமல்படுத்தினால் ஊழியர்களுக்கு இழப்பு ஏற்படும் எனக் கூறி தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திங்கள்கிழமை ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவும், பிப்ரவரி 7ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடவும் ஊழியர்கள் திட்டமிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com