ஆந்திரா | சமோசா சாப்பிட்ட 3 குழந்தைகள் உயிரிழப்பு! காப்பகத்தில் நடந்த துயரம்

ஆந்திராவில் காப்பகம் ஒன்றில் சமோசா சாப்பிட்ட 3 குழந்தைகள் உடல் நலக்குறைவால் உயிரிழந்தனர்.
ஆந்திரா
ஆந்திராமுகநூல்
Published on

ஆந்திராவில் காப்பகம் ஒன்றில் சமோசா சாப்பிட்ட 3 குழந்தைகள் உடல் நலக்குறைவால் உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் கொட்டாரட்லா என்ற ஊரில் ஆதரவற்றோர் சிறுவர்கள் காப்பகம் ஒன்று உள்ளது. இங்கு 60 மாணவர்கள் தங்கியுள்ள நிலையில் அவர்களுக்கு ஞாயிறன்று நிர்வாகம் சார்பில் சமோசாக்கள் வழங்கப்பட்டது. இதையடுத்து, 27 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். இதில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

ஆந்திரா
காலை தலைப்புச் செய்திகள் | கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு விசாரணை முதல் சூப்பர் நீல நிலா வரை!

4 பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் நால்வரும் விசாகப்பட்டினத்தில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். உணவு நஞ்சானதன் காரணமாக இவ்விபரீதம் நடந்திருக்கும் என யூகிக்கப்படுகிறது. இவ்விவகாரம் குறித்து விசாரணைக்கு அனகாபள்ளி மாவட்ட ஆட்சியர் விஜயா உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com