2018-ல் இந்தியாவில் 400 ரயில் நிலையங்களில் வைஃபை ஹாட்ஸ்பாட் மையங்கள் அமைக்கப்படும் என ரயில்டெல் கார்ப்பொரேஷன் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான பயணிகளுக்கு விரைவான இன்டர்நெட் சேவையை வழங்குவதற்காக, 400 நிலையங்களில் வைஃபை நெட்வொர்க் அமைக்கப்படுகிறது. கூகுள் மற்றும் ரயில்டெல் நிறுவனம் ஒன்றுசேர்ந்து இச்சேவையை வழங்கத் திட்டமிட்டுள்ளது என ரயில்டெல் தெரிவித்துள்ளது.
"உலகின் மிகப்பெரிய பொது வைஃபை திட்டங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும். வைஃபை சேவையானது தடையில்லாத ஹெச்.டி வீடியோவை பார்க்கவும், திரைப்படம், பாடல்கள், விளையாட்டுகள் ஆகியவற்றிற்கும் அதிவேக இணைப்புகளை வழங்கும்" எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட இந்த திட்டம், விரைவில் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.