மத்திய பட்ஜெட் | தலைகீழாக மாறும் ஆந்திரா, பீகார்... பார்த்து பார்த்து போடப்பட்ட தரமான திட்டங்கள்...!

மத்திய பட்ஜெட்டில் இரண்டு மாநிலங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.
பீகார் - ஆந்திரா
பீகார் - ஆந்திராபுதிய தலைமுறை
Published on

ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சி, பீகாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாவுக்கு ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை தந்திருப்பதையடுத்து அந்த மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவம் மற்ற மாநிலங்கள் எதிர்ப்புக் குரலை எழுப்பக் காரணமாகியிருக்கிறது.

ஆந்திராவின் வளர்ச்சிக்கான திட்டங்களுக்காக சிறப்பு நிதி என்பது சந்திரபாபு நாயுடுவின் கோரிக்கையாக இருந்தது. பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து என்பது நிதிஷ்குமாரின் வேண்டுகோளாக இருந்தது. இதில் சிறப்பு நிதி, சிறப்புத்திட்டங்கள் என இவ்விரு மாநிலங்களையும் குளிர்வித்துள்ளது மத்திய அரசு. அந்தவகையில்,

பீகாருக்கான அறிவிப்புகள்:

ஐக்கிய ஜனதா தளம் ஆளும் பீகார் மாநிலத்திற்கு சாலை மற்றும் மேம்பாட்டு பணிக்கு மட்டும் 26 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

‘அத்துடன் புதிய விமான நிலையம், மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்; விளையாட்டு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்’ என்றும் நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

தவிர பிற திட்டங்களிலும் மத்திய அரசு பீகாருக்கு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. பீகார் மாநிலத்திற்கு பேரிடர் நிவாரணமாக 11,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டதோடு, வெள்ள பாதிப்புகளை தடுப்பது, விவசாயப் பாசனத்திற்கு என பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன் கயா, புத்தகயா உள்ளிட்ட புராதன சின்னங்கள், கோயில்களை மேம்படுத்த சிறப்பு நிதி, நாளந்தா பல்கலைக்கழக மேம்பாடு, சுற்றுலாத்துறை மேம்பாடு உள்ளிட்ட திட்டங்களுக்கும் கூடுதல் நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பீகார் - ஆந்திரா
நேபாள விமான விபத்து : உயிர்பலி வாங்கும் விமான நிலையம்! என்ன நடந்தது? வெளியான முக்கிய தகவல்!

“பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து தர முடியாவிட்டால், சிறப்பு உதவிகள் அறிவிக்கப்பட வேண்டும்” என்று தான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க மத்திய பட்ஜெட்டில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

ஆந்திரா மாநிலத்துக்கான அறிவிப்புகள்:

பீகார் மாநிலத்தை போலவே சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு ஆளும் ஆந்திர மாநிலத்திற்கும் பல்வேறு புதிய திட்டங்கள் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில்,

புதிய தலைநகரத்தை உருவாக்குதல் மற்றும் உள்கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்த 15 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவின் போலாவரம் திட்டம், நதி நீர், சாலை மேம்பாடு உள்ளிட்டவைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்றும், பின்தங்கிய மாவட்டங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

பீகார் - ஆந்திரா
“பட்ஜெட் பாரபட்சம்” - நாடாளுமன்றத்தில் களத்தில் இறங்கிய எதிர்க்கட்சிகள்!

ஆந்திராவின் தேவைகளை அறிந்து பட்ஜெட்டில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வரவேற்பு தெரிவித்துள்ளார். ஆந்திராவுக்கான தொழில்வளர்ச்சி, உட்கட்டமைப்பு உள்ளிட்ட திட்டங்களால் ஆந்திராவில் புதிய விடியல் காணப்பட்டுள்ளதாக அந்த மாநில ஐடி அமைச்சர் நாரா லோகேஷ் தெரிவித்துள்ளார். ஆனால் ஆந்திராவுக்கு அறிவிக்கப்பட்ட 15 ஆயிரம் கோடி நிதி, ஆந்திர அரசு கடன் வாங்கிக் கொள்வதற்கான உத்தரவாதம் மட்டுமே என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com