இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.8%ஆக குறையும்: ஐஎம்எஃப் கணிப்பு

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.8%ஆக குறையும்: ஐஎம்எஃப் கணிப்பு
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.8%ஆக குறையும்: ஐஎம்எஃப் கணிப்பு
Published on

இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் நிலவும் பொருளாதார மந்தநிலை காரணமாக உலக பொருளாதார வளர்ச்சியை பன்னாட்டு நிதியம் குறைத்து
மதிப்பிட்டுள்ளது.

நடப்பு மற்றும் அடுத்த நிதியாண்டுக்கான உலக பொருளாதார வளர்ச்சி மற்றும் இந்திய வளர்ச்சி குறியீட்டை பன்னாட்டு நிதியமான IMF வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் நிலவும் பொருளாதார மந்தநிலை காரணமாக உலக பொருளாதார வளர்ச்சியை பன்னாட்டு நிதியம் குறைத்து மதிப்பிட்டுள்ளது.

உலகப் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டான 2019-20-ல் 3.3 சதவிகிதமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக இது 0.1 சதவிகிதம் கூடுதலாக கணிக்கப்பட்டிருந்தது. 2021-ல் உலகப் பொருளாதார வளர்ச்சி 0.1 சதவிகிதம் உயர்ந்து 3.4 சதவிகிதமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

2019-20ல் இந்திய பொருளாதார வளர்ச்சி 5.8 சதவிகிதமாக இருக்கும் என்று முன்பு கணித்திருந்த பன்னாட்டு நிதியம், அதை தற்போது 4.8 சதவிகிதமாக
குறைத்துள்ளது. எனினும், 2021-ல் வளர்ச்சி 6.5 சதவிகிதமாக உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. வங்கிசாரா நிதித் துறை மற்றும் கிராமப்புற வருவாய் வளர்ச்சி சரிவே இந்திய பொருளாதார வளர்ச்சியின் வீழ்ச்சிக்கு காரணமாக கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com