‘இதுக்கு இல்லையா சார் ஒரு End-u..😥’ - தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைமுகநூல்
Published on

கோடை காலம் முழுவதுமான தொடங்குவதற்கு முன்னதாகவே தமிழ்நாட்டில் வெயில் வெளுத்து வாங்குகிறது. அதுமட்டுமல்ல மஞ்சள் எச்சரிக்கை, சிவப்பு எச்சரிக்கை என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைகளை விடுத்து கொண்டே செல்கிறது. இதற்கிடையே பல பகுதிகள் வெயிலில் சதம் அடித்து கொண்டே செல்கிறது.

வெப்பம் அதிகரிக்கும் - வானிலை ஆய்வுமையம்
வெப்பம் அதிகரிக்கும் - வானிலை ஆய்வுமையம்pt web

தமிழகத்தில் அதிக மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுவிக்கப்படுவது இதுவே முதல் முறை என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். சரி இதோடாவது முடியுமா என்று பார்த்தால் அதுதான் இல்லை. ஏனெனில், மீண்டும் ஒரு அறிவிப்பினை வெளிட்டுள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.

இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழ்நாட்டின் இந்த மாவட்டங்களில் சுட்டெரிக்க காத்திருக்கும் வெப்ப அலை..! கவனமாக இருங்க மக்களே..!

அதன்படி, “தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும். தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, கேரளாவில் வெப்ப அலைக்கான எச்சரிக்கை விடப்படுகிறது. மேற்கு வங்கம், ஒடிசாவில் கடும் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளது. இதில் மேற்கு வங்கத்திற்கு வெப்ப அலைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே, மே ஒன்றாம் தேதிக்கு பிறகு பல இடங்களில் அதிகபட்சமாக 115 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெயில் குறித்த மக்களின் கவலையை மேலும் அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com