தமிழகத்தின் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று இடி மின்னலுடன், பலத்த காற்றும் சேர்ந்து லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போலவே நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், மதுரை, கரூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், ஈரோடு, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.
27-ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் சென்னையில், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே நாட்டில், அடுத்த 5 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் குறைவாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய பிரதேசம், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, புதுச்சேரி, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், வெப்ப அலையிலிருந்து விடுபட்டு குளிர்ச்சியான சூழல் நிலவும் என வானிலை மையம் கூறியுள்ளது.