மீண்டும் மீண்டும் பிரச்னையில் சிக்கும் பூஜா கேத்கர்?

மகாராஷ்டிராவில் முறைகேடு புகாரில் சிக்கிய பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியின் வீட்டில், பொது இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட தடுப்புச்சுவர் இடித்து அகற்றப்பட்டது.
பூஜா கேத்கர்
பூஜா கேத்கர்முகநூல்
Published on

மகாராஷ்டிராவில் பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் பயிற்சியை மாநில அரசு நேற்று முன்தினம் நிறுத்தி வைத்தது. அந்த பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியின் பெயர், பூஜா கேட்கர். உதவி ஆட்சியராக இருந்த இவர் தன் பணியின்போது நடந்து கொண்ட விதம், அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையும் கேள்விகளையும் எழுப்பியது.

பூஜா கேட்கர்
பூஜா கேட்கர்எக்ஸ் தளம்

தொடர்ந்து அவர்மீது பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்தன. இதனால் அவரது பயிற்சி நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், சாலையோர நடைபாதையை ஆக்கிரமித்து, பூஜாவின் குடும்பத்தினர் செடிகளை வளர்த்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பூஜா கேத்கர்
தலைப்புச் செய்திகள் | ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் மேலும் சிலர் கைது முதல் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று வரை

இதுதொடர்பாக புனே நகராட்சி சார்பில், நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அந்த நோட்டீசுக்கு பூஜா குடும்பத்தினர் தரப்பில் விளக்கம் அளிக்கப்படாததால், புல்டோசர் மூலம் ஆக்கிரமிப்பு தடுப்புச்சுவர் நேற்று இடிக்கப்பட்டது.

முன்னதாக தேர்வில் மிகக் குறைந்த மதிப்பெண் எடுத்திருந்த பூஜா, மாற்றுத் திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டில் பணியில் சேர்வதற்காக பார்வைத்திறன் குறைபாடு இருப்பதாக குறிப்பிட்டு, சிறப்பு ஒதுக்கீட்டில் பணியைப் பெற்றுள்ளார்.

யிற்சி பெண் ஐஏஎஸ் பூஜா கேட்கர்
யிற்சி பெண் ஐஏஎஸ் பூஜா கேட்கர்முகநூல்

கடந்த ஆண்டு மார்ச் மாதம் புனேயில் வேலை ஒதுக்கப்படும் முன்பு, அவரது குறைபாடு பற்றி டெல்லி எய்ம்ஸ் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டார். ஆனால், அவர் விதவிதமான சாக்குபோக்குகள் கூறிவிட்டு, மருத்துவப் பரிசோதனைக்கு செல்லாமல் தவிர்த்துள்ளார். இப்படி நீண்ட இழுபறிக்குப் பிறகுதான், பணியில் சேர்ந்துள்ளார். பணியில் சேர்ந்தபின்னும் பலகட்ட மோசடிகளில் இவர் ஈடுபட்டதாக கூறப்பட்டது. ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான பூஜாவின் தந்தை மற்றும் பஞ்சாயத்து தலைவரான பூஜாவின் தாய் மீது பல சர்ச்சைகள் நிலவுகின்றனர். இந்நிலையில் தற்போது சாலை ஆக்கிரமிப்பிலும் பூஜாவின் குடும்பத்தினர் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com