தூக்கில் தொங்கிய ஐஐடி மாணவர் சடலம் மீட்பு

தூக்கில் தொங்கிய ஐஐடி மாணவர் சடலம் மீட்பு
தூக்கில் தொங்கிய ஐஐடி மாணவர் சடலம் மீட்பு
Published on

காரக்பூர் ஐஐடியில் பயின்று வந்த மாணவர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொழில்படிப்புகளுக்கு பெயர்போனது காரக்பூர் ஐஐடி. இங்கு ஆந்திரப் பிரதேசத்தை சேர்ந்த கங்கிரெட்டி ஹனிமி ரெட்டி என்பவர் இரண்டாம் ஆண்டு எம்.டெக் பயின்று வந்தார். கல்லூரியின் விடுதி அறையில் சக நண்பர் ஒருவருடன் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் கங்கிரெட்டியின் அறை நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனைக் கண்ட சக மாணவர்கள் இதுகுறித்து கல்லூரியின் பாதுகாவலர்களுக்கு தெரிவித்திருக்கின்றனர். அவர்கள் விடுதி அறையை உடைத்து பார்த்தபோது, கங்கிரெட்டி தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

கங்கிரெட்டி தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என கருதும் போலீசார் எதுவாயினும் பிதேச பரிசோதனை முடிவுக்கு பின்னர்தான் இவர் எப்படி இறந்தார் என்பது தெரியவரும் எனத் தெரிவித்துள்ளனர். இதனிடையே கங்கிரெட்டியின் மரணத்தை கேட்டு அவரின் விவசாய குடும்பம் அதிர்ச்சியடைந்துள்ளது.

இதுகுறித்து கங்கிரெட்டியின் குடும்பத்தினர் கூறும்போது, “கங்கிரெட்டி தற்கொலை செய்யும் முடிவை எடுக்ககக்கூடியவன் அல்ல. எங்களிடம் பேசும்போதெல்லாம் இயல்பாகவே பேசுவார். எனவே மரணத்தில் சந்தேகம் உள்ளது. கங்கிரெட்டியின் மரணம் குறித்து நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும்” எனத் தெரிவித்தனர்.

இதனிடையே ஐஐடியின் பதிவாளர் பி என் சிங் இதுகுறித்து கூறும்போது, “படிப்பு ரீதியாக கங்கிரெட்டிற்கு எந்தவித அழுத்தம் இல்லை. அவர் ஒரு சிறந்த மாணவர். புராஜெக்ட் முடிப்பதற்கும் இன்னும் நிறைய நாட்கள் இருக்கின்றன. அப்படியிருக்க அவரின் மரணத்திற்கும் கல்வி சார்ந்த அழுத்தத்திற்கும் தொடர்பில்லை. கங்கிரெட்டியின் மரணம் துரதிர்ஷ்டவசமானது’’ எனத் தெரிவித்தார்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேஹா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேஹா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - +91 44 2464 0050,   +91 44 2464 0060

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com