நீட் தேர்வு குளறுபடிகள் தொடர்பான வழக்குகள், உச்ச நீதிமன்ற விடுமுறை காலச் சிறப்பு அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. நீதிநீட் தேர்வில் தவறு நடந்திருந்தால் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.பதிகள் விக்ரம்நாத் எஸ்.வி.பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு வினாத்தாள் கசிவு, குளறுபடிகள் குறித்த மனுக்கள் மீது விசாரணை நடத்தினர்.
மாணவர்கள் மிகவும் கடுமையாக நீட் தேர்வுக்கு தயாராவதை கருத்தில் கொள்ள வேண்டும், வழக்குத் தொடர்ந்த மாணவர்களை விரோதிகளாக தேசிய தேர்வு முகமை கருதக்கூடாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். நீட் தேர்வில் 0.001 சதவிகிதம் அளவுக்கு அலட்சியம் இருப்பதாக தெரிந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள கூறினர்.
இந்த தேர்வுகளை எழுத குழந்தைகள் எத்தனை கடினமாக தயாராகிறார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும் என்றும், முறைகேடு செய்து மருத்துவர் ஆகும் ஒருவர், சமூகத்துக்கு எத்தனை பெரிய தீங்கிழைப்பவராக இருப்பார் என்று கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை என்று தெரிவித்த நீதிபதிகள், தேர்வு நடத்தும் அமைப்பான தேசிய தேர்வு முகமை உறுதியுடன் இருக்க வேண்டும் என்றும், ஒரு தவறு நடந்தால், அதனை ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் தேசிய தேர்வு முகமைக்கு நீதிபதிகள் அமர்வு அறிவுறுத்தியது.
உரிய நேரத்தில் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று தேர்வு முகமைக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், நீட் தொடர்பான வழக்குகளை ஜூலை 8 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தனர். 2 வாரங்களில் தேசிய தேர்வு முகமையும், மத்திய அரசும் தங்கள் பதில்களை புதிதாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.