பெட்ரோல், டீசல் மீதான வரியை மாநிலங்கள் குறைக்க தயாராக இருந்தால் மத்திய அரசும் அதன் மீது விதிக்கும் கலால் வரியை குறைப்பது குறித்து பரிசீலனை செய்யும் என மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர், பெட்ரோல், டீசலை சரக்கு மற்றும் சேவை வரிக்கு கீழ் கொண்டு வர மாநிலங்கள் திட்டங்களைக் கொண்டு வந்தால் அதனை நிறைவேற்ற மத்திய அரசு விரும்புவதாக கூறினார். இந்தியாவில் பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு கலால் வரியையும், மாநிலங்கள் வாட் வரியையும் விதிக்கின்றன.