சர்ச்சை பேச்சு: மன்னிப்புக் கேட்டார் அமைச்சர் ஹெக்டே!

சர்ச்சை பேச்சு: மன்னிப்புக் கேட்டார் அமைச்சர் ஹெக்டே!
சர்ச்சை பேச்சு: மன்னிப்புக் கேட்டார் அமைச்சர் ஹெக்டே!
Published on

மதச்சார்பின்மையாளர்கள் குறித்து இழிவாக விமர்சித்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே மன்னிப்புக் கேட்டார்.

மதச்சார்பின்மையாளர்கள் தங்களது பெற்றோர் யார் என தெரியாதவர்கள் என மத்திய திறன் மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் அனந்தகுமார்  ஹெக்டே கேவலமாக விமர்சித்திருந்தார். அத்துடன் மதச்சார்பின்மை என்பதையே அரசியலமைப்பு சட்டத்தில் இருந்து மாற்றுவோம் என்றும் கூறினர். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. நேற்று பாராளுமன்றம் கூடியதும் அனந்தகுமார்  ஹெக்டே மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

பாராளுமன்றத்தின் இரு அவைகளும் அமளி காடானதை அடுத்து ஹெக்டே மாநிலங்களவையில் இருந்து வெளியேறினார். இதுபற்றி அமைச்சர் ஹெக்டே உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் வலியுறுத்தினார். 

மக்களவையில் இன்றும் இந்தப் பிரச்னை எதிரொலித்தது. முன்னதாக, ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அமைச்சர் ஹெக்டே, மன்னிப்பு கேட்டுள்ளார். ‘இந்திய அரசியலமைப்பு சட்டமும் பாராளுமன்றமுமே உயர்வானது. அதையும், பாபா சாகேப் அம்பேத்கரையும் நான் மதிக்கிறேன். இந்திய குடிமகனாக அதற்கு எதிராக நான் செயலபட மாட்டேன். எனது பேச்சால் யாருடைய மனமாவது புண்பட்டிருந்தால் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்’ என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com