”இட்லி சலிப்பூட்டும் உணவா?” கொந்தளித்த தென்னிந்தியர்கள்.. சூடான ட்விட்டர் டைம்லைன்

”இட்லி சலிப்பூட்டும் உணவா?” கொந்தளித்த தென்னிந்தியர்கள்.. சூடான ட்விட்டர் டைம்லைன்
”இட்லி சலிப்பூட்டும் உணவா?” கொந்தளித்த தென்னிந்தியர்கள்.. சூடான ட்விட்டர் டைம்லைன்
Published on

சமூக வலைதளமான டிவிட்டர் டைம்லைன் முழுவதும் இட்லி பற்றிய கருத்துகளால் நிரம்பிவழிகிறது. அது யாரிடமிருந்து தொடங்கியது? எப்படி, யார்? யாரால்? இந்த சூடான விவாதம் கையிலெடுக்கப்பட்டது என்பதை விரிவாகப் பார்க்கலாம் வாருங்கள்... 

பற்ற வைத்த பிரிட்டன் வரலாற்றாசிரியர்:

பிரிட்டனைச் சேர்ந்த வரலாற்றுப் பேராசிரியர் எட்வர்ட் ஆண்டர்சன், இந்தியா- பிரிட்டன் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டுவருபவர். சமீபத்தில் அவர், "உலகிலேயே மிக அலுப்பான உணவு இட்லிதான்" என்று டிவிட் செய்திருந்தார்.

அவர் ட்விட் செய்த கொஞ்ச நேரத்திலேயே இந்தக் கருத்து சமூக வலைதளத்தில் மிகப்பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது. தீயைப் போல இந்த விவாதம் பற்றி காரசாரமாக கருத்துக்கள் பரிமாறப்பட்டன. 

வரலாற்றுப் பேராசிரியர் எட்வர்ட் ஆண்டர்சனின் ட்விட்டர் பதிவிற்குப் பதிலளித்துள்ள ஜூமேட்டா உணவு டெலிவரி நிறுவனம், "ஓர் உணவு ஏன் இத்தனை மக்களால் அதிகம் விரும்பப்படுகிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை" என்று தெரிவித்தது.

’இட்லி’-கருத்தால் பற்றி எரிந்த ட்விட்டர்:

சில மணி நேரங்களிலேயே இட்லி பிரியர்கள் - இட்லி வெறுப்பாளர்கள் என இரண்டு குழுக்களாக பிரிந்து ட்விட்டரில் கடும் விவாதங்களில் ஈடுபட்டார்கள். "இந்த இட்லி வெறுப்பைப் புரிந்துகொள்ள முடியவில்லை. தேங்காய் சட்னியும் சூடான பெங்களூர் சாம்பாரும் இருக்கும்போது இன்னும் திருப்திகரமான உணவைப் பற்றி என்னால் நினைக்கமுடியவில்லை" என்ற கருத்தை வெளியிட்டுள்ளார் அஜய் காமத் என்ற இட்லி ஆதரவாளர்.

சசிதரூர் 

களத்தில் இறங்கிய சசிதரூர், டி.எம். கிருஷ்ணா:  

எழுத்தாளரான இஷான் தரூர், ஆண்டர்சனின் கருத்தை ட்விட்டரில் விமர்சித்திருந்தார். தன் மகனுக்குப் பதிலளிக்கும்விதமாக இட்லியை ஆதரித்துப் பதிவிட்டுள்ளார் திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்பி சசிதரூர்.  "எஸ் மை சன்... இந்த உலகில் உண்மையிலேயே சவால்விடுகிறவர்கள் இருக்கிறார்கள். நாகரிகத்தைப் புரிந்துகொள்வது கடினம். இட்லியைப் பாராட்டுவது, கிரிக்கெட்டை ரசிப்பது அல்லது ஓட்டம்துள்ளலைப் பார்ப்பதற்கான சுவையும் சுத்திகரிப்பும் ஒவ்வொரு மனிதனுக்கும் வழங்கப்படவில்லை. இந்த ஏழை மனிதன் மீது பரிதாபப்படுகிறேன். வாழ்க்கையைப் பற்றி அவருக்குத் தெரியவில்லை" என்று காட்டமாக அவர் டிவிட் செய்துள்ளார்.

இட்லி பற்றிய டிவிட்டர் விவாதங்களைக் கவனித்துவந்த இந்த விவாதத்திற்கு காரணகார்த்தாவான எட்வர்ட் ஆன்டர்சன், "எதிர்பாராதவிதமாக தென்னிந்தியா முழுவதையும் கோபப்படுத்திவிட்டேன். மதிய உணவுக்கு இட்லியை ஆர்டர் செய்வது சரியாகாது. சிலர் என் கருத்தை செல்வாக்கற்றது, அவதூறு என்று சொல்வதற்காக வருத்தப்படுகிறேன். என் கருத்துக்களில் மாற்றமில்லை " என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

நம்மூர் பாடகர் டிஎம் கிருஷ்ணாவும் இட்லி பற்றி வெளிப்படையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். "கேரள மக்களுக்கு இட்லிக்கும் தோசைக்கும் சுவையான சட்னியும் சாம்பாரும் செய்யத் தெரியாது. அந்த வரிசையில் கன்னடர்களும் தமிழர்களும் கைகளை உயர்த்திக்கொள்ளலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com