“வேதியியலில் 24 மார்க்தான் எடுத்தேன்” - மதிப்பெண் சான்றிதழை வெளியிட்ட ஐஏஎஸ் அதிகாரி

“வேதியியலில் 24 மார்க்தான் எடுத்தேன்” - மதிப்பெண் சான்றிதழை வெளியிட்ட ஐஏஎஸ் அதிகாரி
“வேதியியலில் 24 மார்க்தான் எடுத்தேன்” - மதிப்பெண் சான்றிதழை வெளியிட்ட ஐஏஎஸ் அதிகாரி
Published on

தனது 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வில் வேதியியல் பாடத்தில் 24 மதிப்பெண்கள்தான் எடுத்தேன் என ஐஏஎஸ் அதிகாரி நிதின் சங்வான் தெரிவித்துள்ளார்.

மதிப்பெண்கள் மட்டும் எல்லாம் இல்லை. வாழ்க்கையில் நிறைய இருக்கிறது. இந்த வாசகம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆனால் உண்மையில் மதிப்பெண்கள் அதிகம் வாங்கவில்லை என்றால் அறிவாளிகள் இல்லை என தீர்மானிக்கப்படுகிறோம். இப்போதும் நிறைய பெற்றோர்கள் பக்கத்துவீட்டு பிள்ளைகளுடன் தங்களது பிள்ளைகளை ஒப்பிட்டு குறைகூறி வருவதும் தொடர்கிறது.

நடப்பாண்டின் 10 மற்றும் 12ம் வகுப்பின் அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்தது. மேலும் ஏற்கெனவே நடைபெற்ற தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டது. தற்போது சிபிஎஸ்சி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ளது. 

இந்நிலையில், தனது 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வில் வேதியியல் பாடத்தில் 24 மதிப்பெண்கள்தான் எடுத்தேன் என ஐஏஎஸ் அதிகாரி நிதின் சங்வான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் அவரது மதிப்பெண் சான்றிதழை பதிவிட்டு “எனது 12 ஆம் வகுப்பு தேர்வில் வேதியியலில் 24 மதிப்பெண்கள் தான் பெற்றேன். தேர்ச்சி மதிப்பெண்களை விட ஒரு மதிப்பெண் தான் அதிகம் பெற்றேன். ஆனால் என் வாழ்க்கையில் நான் என்ன விரும்புகிறேன் என்று அது தீர்மானிக்கவில்லை. மதிப்பெண்களை வைத்து குழந்தைகளை ஏமாற்ற வேண்டாம். போர்டு முடிவுகளை விட வாழ்க்கையில் அதிகம் உள்ளது. தேர்வு முடிவுகள் உங்கள் நோக்கத்திற்கான வாய்ப்பாக இருக்கட்டும். விமர்சனத்திற்காக அல்ல” எனத் தெரிவித்துள்ளர். இவரது பதிவு ட்விட்டர்வாசிகளிடையே வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com