வெள்ளத்தில் சிக்கிய சிறுமியை இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மீட்கும் அசத்தல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது
வட மாநிலங்களில் பருவ மழை பெய்துவருகிறது. மகாராஷ்ட்ரா, குஜராத் மாநிலங்கள் மழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. குஜராத் மாநிலத்தில் வடோதரா, அகமதாபாத், சூரத், சவுராஷ்டிரா, நவ்சாரி நகரங்கள் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளன. நவ்சாரி அருகே உள்ள சுமார் 12 கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மக்கள், எங்கும் செல்ல முடியாத நிலை யில் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர்.
மழை தொடர்ந்து கடுமையாக ய்து வருவதால் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கும் நிலையில் இருக்கின்றன. இதனால், மக்களைப் மீட்கும் பணியில் விமானப்படை ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சுமார் 45 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக் கானோர், விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் ஜாம்நகர் பகுதியில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் இருந்து சிறுமி ஒருவரை விமான படை மீட்கும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.