”அப்பாவை போல ராணுவ வீரர் ஆகனும்”- வீர் சக்ரா விருது பெற்ற மறைந்த ரானுவ வீரர் பழனியின் மகன்

”அப்பாவை போல ராணுவ வீரர் ஆகனும்”- வீர் சக்ரா விருது பெற்ற மறைந்த ரானுவ வீரர் பழனியின் மகன்
”அப்பாவை போல ராணுவ வீரர் ஆகனும்”- வீர் சக்ரா விருது பெற்ற மறைந்த ரானுவ வீரர் பழனியின் மகன்
Published on

"எனது தந்தையை போன்று ராணுவத்தில் பணிபுரிய வேண்டும் என்பதுதான் என்னுடைய லட்சியம். ராணுவத்தில் மிகப்பெரிய அதிகாரியாக சேருவேன்” என ‘வீர் சக்ரா’ விருது பெற்ற மறைந்த ராணுவ வீரர் பழனியின் மகன் பிரசன்னா புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

வீர் சக்ரா விருது பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனியின் மனைவி வானதி தேவி டெல்லியில் புதிய தலைமுறைக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “வீர் சக்ரா விருதை எனது கணவருக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன். அதேநேரத்தில் எனது கணவரின் தியாகத்திற்கு கிடைத்த அங்கீகாரமாக இதை நான் கருதுகிறேன். தமிழகத்தின் கடைக்கோடியில் இருந்த ஒருவர் நாட்டுக்காக என்ன செய்தார் என்பதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனது கணவரால் நானும் எனது குழந்தைகளும் தலைநிமிர்ந்து இருக்கிறோம்.

நாங்கள் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மிகச்சிறிய கிராமத்தில் பிறந்தவர் எனது கணவர். எனது கணவர் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த உடனே ராணுவத்தில் சேர்ந்தார். ராணுவ தேர்வு இரண்டு முறை தோல்வியடைந்து மூன்றாவது முறை வெற்றி அடைந்து பின்னர் வேலையில் சேர்ந்தார். ராணுவத்தில் சேர்ந்த அங்கீகாரம் பெற எனது கணவர் அதிக கஷ்டங்களை அனுபவித்து உள்ளார். எனது கணவர் அவரை போன்று ராணுவத்தில் சேர சரியான வழிகாட்டு இல்லாதவர்களை ராணுவத்தில் சேர்த்தார். குறிப்பாக அவருடைய தம்பியும் ராணுவத்தில் சேர்ந்தார்.

எனது கணவர், எனது மகன் பிறந்த பிறகு அவனிடம் ‘நான் ராணுவத்தில் சாதாரண சிப்பாயாக சேர்ந்தேன். உனக்கு வழிகாட்டியாக நான் இருக்கிறேன். நீ அதிகாரியாக ராணுவத்தில் பொறுப்பேற்க வேண்டும் உனக்கு நான் சல்யூட் அடிக்க வேண்டும்’ என கூறியிருக்கிறார். தனது ஓய்வுக்கு பிறகு எனது கணவர் இந்திய ராணுவத்தில் என்னென்ன பணியிடங்கள் இருக்கிறது, அவற்றில் எப்படி சேர வேண்டும் என பிறருக்கு எடுத்துக் கூற இருந்தார். இன்று அவர் எங்களுடன் இல்லையென்றாலும், அவரின் எண்ணங்கள் எங்களிடம் உள்ளன. எனது மகனின் இலட்சியமே ராணுவத்தில் சேர வேண்டும் என்பதுதான்” என்றார்.

தொடர்ந்து மறைந்த பழனியின் மகன் பிரசன்னா புதிய தலைமுறையிடம் பேசுகையில், “நான் தற்போது ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டு வருகிறேன். என்னுடைய இலட்சியம் என்பது எனது தந்தையை போன்று ராணுவத்தில் அதிகாரியாக பொறுப்பேற்க வேண்டும் என்பதுதான். எனது தந்தையை விட உயர்ந்த பொறுப்பில் ராணுவத்தில் பணிபுரிய வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com